Sunday, June 27, 2010

விடுதலை பற்றி அரசிடம் பேச தமிழறிஞர்கள் மூலம் நளினி கோரிக்கை

தனது விடுதலை பற்றி தமிழக அரசிடம் பேச, தமிழறிஞர்களுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது தரப்பு வழக்கரைஞர் பா.புகழேந்தி கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை ந‌ே‌ற்று வழ‌க்க‌றிஞ‌ர் புக‌ழே‌ந்‌தி சந்தித்தது பே‌சினா‌‌ர்.

பின் செய்தியாளர்களிடம் பே‌சிய புகழே‌ந்‌தி, பல்வேறு உலகத் தமிழறிஞர்கள் தற்போது தமிழகம் வந்துள்ளனர். நளினியின் விடுதலை பற்றி தமிழக அரசிடம் பேசுமாறு இந்த தமிழறிஞர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நண்பர்கள் மூலமாக சில தமிழறிஞர்களிடம் நளினி இக்கோரிக்கையை விடுத்துள்ளார். சிலருக்கு வழக்கரைஞர்கள் மூலமாக தகவல் அனுப்பியுள்ளார்.

நளினி ஆயுள் தண்டனை பெற்று கடந்த 13ஆம் தேதியுடன் 19 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்களைச் சந்தித்து நளினியின் வழக்குக் குறித்து கூறி, விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம் எ‌ன்றா‌ர் புகழே‌ந்‌தி.

No comments:

Post a Comment

Blog Archive