Sunday, June 27, 2010

பசுமை வாயு வெளியேற்றத்தை ஆய்வு செய்ய தனி செயற்கைக்கோள்: இஸ்ரோ

பசுமை வாயுவையும், அதன் வெளியேற்றத்தினால் ஏற்படும் பாதிப்பை ஆய்தறிய தனி செயற்க்கைகோளை அனுப்ப இந்திய வானியல் ஆய்வு மையம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.

“பசுமை வாயுக்கள் எனப்படு்ம் கரியமிள வாயு, கார்பன் மோனாக்சைட், நைட்ரிக் ஆக்சைட் உள்ளிட்ட வானிலை மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படும் வெப்ப வாயுக்கள் குறித்தும், அவைகளின் வெளியேற்றத்தினால் ஏற்படும் பாதிப்பை ஆராயவும் அதற்கென்ற தனித்த செயற்க்கைக்கோள் ஒன்றை அடுத்த 2, 3 ஆண்டுகளில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது” என்று திட்டக் குழுவின் உறுப்பினரும், இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவருமான முனைவர் கஸ்தூரிரங்கன் கூறியுள்ளார்.

பசுமை வாயு ஆய்விற்கான செயற்கைக்கோள் தற்போது வடிவமைக்கப்ட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான நிதியுதவியை மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனத்துறை அளிக்கவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவும், ஜப்பானும் இப்படிப்பட்ட செயற்கைக்கோள்கை விண்ணில் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Blog Archive