Monday, September 19, 2011

'ட்விட்டர்' மெசேஜ் மூலம் உண்ணாவிரதத்தை அப்டேட் செய்யும் நரேந்திர மோடி!

Narendra Modi

அகமதாபாத்: 3 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது உண்ணாவிரதம் குறித்து ட்விட்டர் தளம் மூலம் உடனுக்குடன் செய்திகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மோடியின் உண்ணாவிரதம் நேற்று 2வது நாளாக தொடர்ந்தது. இன்றுடன் முடிவடைகிறது. இவரது உண்ணாவிரதத்திற்கு பெரும் திரளானோர் திரண்டு வ்நது ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனது உண்ணாவிரதத்தை சைபர் தளத்திற்கும் கொண்டு சென்று உலகம் முழுவதும் பரப்பி வருகிறார் மோடி. அவருக்கென்று பிரத்யேகமாக ட்விட்டரில் ஒரு கணக்கு உள்ளது. @narendramodi என்ற அவரது ட்விட்டர் கணக்கு மூலம் உண்ணாவிரதம், அதன் நோக்கம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன.

அதேபோல அவரது பெயரில் உள்ள பேஸ்புக்கிலும் இந்த செய்திகள் அப்டேட் செய்யப்படுகின்றன. அந்த பேஸ்புக்கின் பக்கங்களில், “Sadbhavna Mission” மற்றும் “Narendra Modi for PM” என்ற வாசகங்கள் பிரதானமாக உள்ளன.

மேலும், 022-61550770 என்ற கட்டணமில்லாத தொலைபேசி சேவையையும் ஏற்படுத்தி அதில் மிஸ்ட் கால் கொடுத்து ஆதரவு தெரிவிக்கச் சொல்கின்றனர். இந்த எண்ணை எஸ்எம்எஸ் மூலம் நாடு முழுவதும் மோடியின் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.

மொத்தத்தில் அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு இணையான பரபரப்பையும், பிரபலத்தையும் அனைத்து வழிகளிலும் ஏற்படுத்த மோடியும், அதன் ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர்.

No comments:

Post a Comment

Blog Archive