Friday, June 18, 2010

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு


பதிவு செய்த நாள் 6/17/2010 12:35:40 AM

சென்னை : கோவையில் 5 நாட்கள் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வசதியாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வருகிற 20ம் தேதி முதல்வர் கருணாநிதி கோவை செல்கிறார். 23ம் தேதி மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார். கவர்னர் பர்னாலா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சிறப்புரையாற்றுகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் அங்கு நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர்.
மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 23, 24, 25 ஆகிய 3 நாட்களும், கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் 28ம் தேதி வரையும் விடுமுறை அளித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில், வருகிற 23 முதல், 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசுப் பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த கோரிக்கைகளை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அரசுப் பணியாளர்களுக்குச் ‘சிறப்பு தற்செயல் விடுப்புÕ வழங்கலாம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் விடுமுறை

சிபிஎஸ்இ&யின் சென்னை மண்டல அதிகாரி நாகராஜு கூறுகையில், ‘‘செம்மொழி மாநாடு தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும்’’ என்றார்.

No comments:

Post a Comment