கோவை : 23ம் தேதி தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை முடித்து விட்டன. மாநாட்டையொட்டிமுதல்வர் கருணாநிதி நாளையே கோவை செல்கிறார்.
தமிழ் கூறும் நல்லுலகிலேயே முதல் முறையாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது.
உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வருகை தரவுள்ளனர். மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இன்று மாலைக்குள் அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பிரமாண்டமான கொடீசியா வளாகத்தின் முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டு மேடை மட்டும் கிட்டத்தட்ட 6400 சதுர அடியில் போடப்பட்டுள்ளது. பந்தலுக்குள் இருப்பவர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளைத் தெளிவாக காணும் வகையில், எல்.சி.டி. பிளாஸ்மா டிவிகள் வைக்கப்பட்டுள்ளன. மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்காக வரும் குடியரசுத் தலைவர், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வசதிக்காக மாநாட்டு மேடைக்கு பின்புறத்தில் தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் தொடக்க நாளன்று பிரமாண்டப் பேரணி நடைபெறுகிறது. வ.உ.சி. மைதானத்தில் மாலை 4 மணிக்குப் புறப்படும் இந்தப் பேரணி அவினாசி சாலை வழியாக செல்லும். இப்பேரணியில் இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் கலந்து கொள்ளவுள்ளன.
மாநாட்டையொட்டி கோவை முழுவதும் தகதகவென புதுப் பெண் போல ஜொலிக்கிறது. எங்கு பார்த்தாலும் திருவிழாக் கோலமாக உள்ளது. சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முக்கியச் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. மின் விளக்குகள் அனைத்தும் பளிச்சென எரிகின்றன. இரவில் தேவலோகம் போல பளிச்சென மின்னுகிறது கோவை.
மாநாட்டிற்கு வருவோர் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பஸ்கள் உள்ளிட்டபோக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செம்மொழி கலை விழா
மாநாட்டிற்கு முன்கூட்டியே வரும் மக்களை குஷிப்படுத்தவும், அவர்களை வரவேற்கும் வகையிலும் இன்று இரவு தொடங்கி 22ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கு செம்மொழிக் கலைவிழா என பெயரிடப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் ஒன்பதரை மணி வரை இந்த கலை விழா நடைபெறும்.
காந்திபுரம் சிறைச்சாலை மைதானம், காந்தி பூங்கா, வடவள்ளி மருதமலை ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் என்.ஜி.ராமசாமி பள்ளி, சாய்பாபா காலனி டி.ஏ.ராமலிங்கம் பள்ளி, சி.எம்.எஸ்.பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் சிருஷ்டி வித்யாலயா, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, துடியலூர் ஐ.டி.ஐ. வளாகம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் ஆகிய இடங்களில் இந்த கலை விழா நடைபெறும்.
இவற்றை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் நாளை பயணம்
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நாளையே கோவை செல்கிறார். நாளை முற்பகல் 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூ்லம் கோவை செல்கிறார் முதல்வர்.
நாளை முதல் ஒரு வாரத்திற்கு கோவையிலேயே முதல்வர் தங்கியிருப்பா
No comments:
Post a Comment